Tuesday, December 28, 2010

        ஸ்கைப்பில் எழுந்த திடீர் பிரச்சினை


பிரபல தொடர்பாடல் சேவையான ஸ்கைப்பினுள் நுழையமுடியவில்லையா?
அத்தொழிநுட்ப கோளாறிற்கு முகங்கொடுப்பது நீங்கள் மட்டுமல்ல!

இதனை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.
( இச்செய்தி எழுதப்படும் வரை)

இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்கைப்பின் 

பூமிக்கு அடியில், 30 மீற்றர் ஆழத்தில், "விக்கிலீக்ஸ்"

     பூமிக்கு அடியில், 30 மீற்றர் ஆழத்தில், 
இணையத்தள ஆவணக் காப்பகம் கண்டுபிடிப்பு




பூமிக்கு அடியில், 30 மீற்றர் ஆழத்தில், "விக்கிலீக்ஸ்" இணையதளத்தின் ஆவண

காப்பகம் இருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளின் இரகசிய 

ஆவணங்களை வெளியிட்டு, உலகளவில் பெரும் பரபரப்பை கிளப்பிவரும் "

விக்கிலீக்ஸ்" இணையதளம் இரகசிய இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த இணையத்தளம் வெளியிடும் தகவல் திரட்டு அடங்கிய 

ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் இரகசிய இடம் குறித்து, தற்போது தகவல்கள் 

வெளியாகியுள்ளன.
சுவீடன் நாட்டிலுள்ள ஸ்டாக் ஹோம் நகரின் மையப்பகுதியில், பயோனின் என்ற 



இடத்தில் இந்த இரகசிய இடம் அமைந்துள்ளது.

பூமிக்கு அடியில், 30 மீற்றர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த இரகசிய அலுவலகம், 

கிரானைட் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்னர் வெடிபொருட்கள் 

உள்ளிட்டவற்றை பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தக் குகை, கடந்த 2008இல் 

மீண்டும் திறக்கப்பட்டது.

சுவீடன் கட்டடக்கலை நிபுணர்கள் ஆல்பர்ட் பிரான்ஸ், லோனார்ட், கென்னத் அடம்ஸ் 

உள்ளிட்டோர் இதை புதுப்பித்து நவீனப்படுத்தியுள்ளனர்.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட்டுகளைப் போன்றும் இது 

உருவாக்கப்பட்டுள்ளது. மிதக்கும் கொன்பரன்ஸ் ஹோல், கண்ணாடி அறைகள், நீள 

வராந்தாக்கள், வழவழப்பான தரைகள், நவீனமான இருக்கைள் ஆகியவை இங்குள்ளன.

மேலும், செயற்கை நீர்வீழ்ச்சிகள், செடிகள், மரவேலைப் பாடுகள் ஆகியவற்றை 

கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்திச் சாதனங்களும், பல்வேறு 

பாதுகாப்பு, கண்காணிப்புக் கருவிகளும் இங்குள்ளன.

இந்த இரகசிய இடத்தின் இரும்பிலான வாயில் கதவு 1.6 அடி தடிமனானது. இந்தக் 

கதவு, கடந்த 1943இல் உருவாக்கப் பட்டுள்ளது. வெடிகுண்டு களால் 

சேதமடையாதவாறு இந்த இடத்தில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விக்கிலீக்ஸின் கைவசமுள்ள தகவல்கள் அனைத்தும், மிக அதிக கொள்ளளவு திறன் 

கொண்ட மெமரி டிஸ்க்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன எனத் தகவல்கள் 

வெளியாகியுள்ளன.

இங்குள்ள சூப்பர் சர்வர்கள் மூலம், பல்வேறு நிறுவனங்களுக்கு, 

"விக்கிலீக்ஸ்"தகவல்களை 

வழங்கி வருகிறது