| இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம் ? |
| நேற்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் அதிசமான நிகழ்வுகள் நடைபெற்றதாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேற்றுக் கிரகவாசிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக பல பாகங்களில் தகவல்கள் வெளியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. பறக்கும் தட்டுகளை சிலர் நேரடியாக பார்த்ததாக பத்திரிகைக்கு தகவல் அளித்துள்ளனர். பறக்கும் தட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் தரையிறங்கியிருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. பச்சை நிற உடலுடைய குள்ள மனிதர்கள் பறக்கும் தட்டிலிருந்து இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
இணையத்தில் பணம் சம்பாதிப்பது , சந்தைநிலவரம்,வேலைவாய்ப்பு,வெளிநாட்டு வீசா,போன்றவற்றுக்கான தமிழ் விளக்கங்களும் ,VEDIO, SONGS,FILM தரவிறக்கங்களும் செய்துகொள்ளலாம்
Monday, January 17, 2011
| கற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’ |
பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில் வரட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றனவாம். இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமியைச் சுற்றி வருகின்றன. சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது. இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற் துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங்கும் நடமாடுகின்றன. இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன.இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களிமண் தட்டா காரணம்? இவை வேகமான காற்றினால்தான் நகர்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில்லையாம். எனவே அந்த வாதமும் எடுபடாது. நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்பதை இது காட்டுகிறது. இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும்தான். தண்ணீரில் மிதக்கும் ‘வைரம்’ வைரங்கள் அதிக பளபளப்பு கொண்டவை; அதேபோன்று விலையும் அதிகம். பட்டை தீட்டப்படாத வைரம் மிகவும் கடினமானது. இயற்கையான வைரம் உருவாவதற்கு அதிக வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகிறது. பூமியில் மிகச்சில வைரச்சுரங்கங்களே உள்ளன. உலகில் உள்ள வைரங்களில் 90 சதவீதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறது. மற்ற எல்லா ரத்தினங்களை விடவும் வைரத்தின் படிகக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கார்பன் அணுக்களின் கட்டமைப்பே அதனை மிகக் கடினமாக மாற்றியுள்ளது. இது எண்முக வடிவம் அல்லது ஆறு சதுர பக்கங்களைக் கொண்டிருக்கும். திரவத்தில் கரையாது, கொழுப்பில் ஒட்டும், வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது போன்ற பண்புகள் வைரத்துக்கு உண்டு. தூய வைரம் தண்ணீரில் மிதக்கும். மேலும் ஒளி விலகல் மற்றும் ஒளிபுகும் திறன் ஆகிய இரண்டும் வைரத்துக்கு உண்டு. பென்சில், நிலக்கரி மற்றும் வைரம் ஆகிய மூன்றும் கார்பன் அணுக்களால் ஆனவை. வைரங்களின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளால் அது மற்ற ரத்தினங்களில் இருந்து வேறுபடுகிறது. பொதுவாக வைரங்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும், சில சமயங்களில் ஊதா, வெளிர் சிவப்பு, சிவப்பு, பச்சை மற்றும் அடர் சாம்பல் நிறங்களில் கூட கிடைக்கின்றன. ஊதா நிற வைரம் அதிக விலை கொண்டது. ஏனெனில் இந்தநிற வைரங்கள் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது |
| 2012ல் உலகம் அழிந்து விடுமா? விறுவிறுப்பான ஆராய்ச்சி பார்வை! |
விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், ஜோதிடர்களும் அடித்துக் கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவை அனைத்தும் பொய் என்றும், இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்றும் விறுவிறுப்புடன் இந்திய விஞ்ஞானி விவாதிக்கிறார். உலகம் 2012ல் அழிந்து விடும் என்பதற்கு சான்றாக சில முக்கிய கூறுகள் உள்ளன. இன்று நாம் பின்பற்றி வரும் திகதி முறைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்தவர்கள் மாயன் நாகரித்தினர். சூரியன் காலாவதியாகும் திகியையும் இவர்கள் கணித்துள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, அந்த திகதி 2012 தான். எனவே, 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பது இவர்கள் கருத்து. சூரியனுக்குள் ஏற்படவிருக்கும், பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்கள். உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஐரோப்பிய விஞ்ஞானிகள், உலகின் பெரிய மூலக்கூறு இயந்திரத்தை கண்டறிந்துள்ளனர். இவர்கள் 27 கிலோ மீட்டர் ஆழத்தில், அணுக்களை வைத்து, அவற்றை ஒன்றிணைத்து மீண்டும் வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவற்றை 2012ல் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு நடந்தால், பூமியே நொறுங்கி விடும். திரு விவிலிய நூலில், உலகம் 2012ல் அழிந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும், சாத்தானுக்கும் கடைசி யுத்தம் நடக்கும் போது, இந்த அழிவு ஏற்படும் என்று பைபிள் கூறுகிறது. இதையே, சீனத்து நூல்களும், சில இந்து புராணங்களும் கூறுகின்றன. இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றின் வாயில் இருப்பதாகவும், அது வெடித்தால் இந்த உலகமே சிதறிவிடும் என்று அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு 650000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்குமாம். அந்த ஆண்டு 2012 என்கிறார்கள் அவர்கள். இவையனைத்தும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பதற்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள். மேற்கூறிய அனைத்தும் பொய் என்று இந்திய விஞ்ஞானி அய்யம் பெருமாள் அடித்துக் கூறுகிறார். விஞ்ஞானிகள் நிகழ்த்திய அதிநுட்ப ஆராய்ச்சியின் படி, இன்னும் 450 ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார் அய்யம் பெருமாள். இன்னும் ஒரு சிலர், 2020ம் ஆண்டு பூமியை குறுங்கோள் ஒன்று தாக்கும் என்கிறார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், அக்னி ஏவுகணை மூலமாக அதை அழிக்கும் திறன் உலக ஆய்வுக் கூடத்தில் உள்ளது. எனவெ, எக்காரணத்தைக் கொண்டும் பூமி அழியாது என்கிறார் இவர். சூரிய சக்தி மூலமாக மின்சாரம் பெறும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. அதேபோல், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டமும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலக மக்களின் தேவைக்கு மின்சாரமும், குடிநீரும் உள்ளது. எதிர்காலத்தில் நாம் அதற்கு பயப்பட தேவையில்லை என்கிறார் அவர். பூமி வெப்பமயமாதலைத் தடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, மாசு கட்டுப்பாட்டை சரி செய்யலாம். அதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் விஞ்ஞானி அய்யம் பெருமாள். |
Subscribe to:
Comments (Atom)