Friday, January 14, 2011

நோக்கியா E5


நோக்கியா அடுத்தவரவு நோக்கியா E5.இந்த போன்களின் பட்டன்கள் சாதாரன போன்களைப் போல இல்லாமல் கம்ப்யூட்டர் பட்டன்களின் வரிசையைப் போல இருக்கும். இதில் மெயில் வசதியும் உள்ளது.




புதிய செல்போன் வாங்க நினைப்பவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, 3 ஜி வசதி இருக்கிறதா என்பதுதான். அத்துடன் ஜிபிஎஸ், வைஃபை, க்வெர்டி கீபோர்டு போன்ற தொழில்நுட்பங்களும் கிடைக்குமா என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டனர்.
ஆனால்  நோக்கியாவின் 2 புதிய வெளியீடுகள் இந்த நிலைமையை மாற்றியிருக்கின்றன. அதில் ஒன்று C5 மற்றொன்று E5.
3ஜியின் முக்கிய வசதியே இணையப் பயன்பாடுதான். சி5 மற்றும் இ5 ஆகிய இரண்டு மாடல்களும் 10.2 எம்பிபிஎஸ் வேகம் வரை இணையத் தொடர்பை அளிக்கின்றன. சேவை அளிப்பவர்கள் அந்த வேகத்தில் இணைப்பை வழங்க வேண்டும் அவ்வளவுதான். சி5ல் வைஃபை வசதி கிடையாது. இ5-ல் இந்த வசதி இருக்கிறது.
இதில் சி5 மிகவும் எளிமையான வழக்கமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இ5 மிகவும் நவீனமான க்வெர்டி கீபோர்டு வசதியுடன் வந்திருக்கிறது. இதில் இ5-ல் விடியோ கால் கேமரா கிடையாது. ஆனால், வேறுபல வசதிகள் இ5-ல் அளிக்கப்பட்டிருக்கின்றன.
சி5-ல் 128 எம்பி ராம் மெமரியும் இ5-ல் 256 எம்பி ராம் மெமரியும் உள்ளன. இந்த வசதியால் இந்த இரு போன்களுமே மிக வேகமாகச் செயல்படுகின்றன. அதேபோல் சி5-ல் 50 எம்பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் இ5-ல் 250 எம்.பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் உள்ளன. கூடுதலாக 2 ஜிபி மெமரி கார்டு வழங்கப்படுகிறது. சி5யில் 3.2 மெகாபிக்சல் கேமராவும் இ5-ல் 5 மெகாபிக்சல் கேமராவும் உள்ளன.
சி5 ஸ்கீரின் 16 மில்லியன் வண்ணத்திறனும் இ5 ஸ்கிரீன் 256கே வண்ணத்திறனும் கொண்டிருக்கின்றன. இ5-ல் குறைந்த வண்ணத்திறன இருப்பதால் பெரிதாக வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை.
இரு போன்களிலுமே ஜிபிஎஸ் வசதி இருக்கிறது. ஏபிஜிபிஎஸ் சேவையும் கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வகை செய்யும் கூகுள் லாட்டிட்யூட் சேவை இரு போன்களிலுமே மிக அருமையாகச் செயல்படுகிறது.
செல்லும் இடங்களிலெல்லாம் இணைத்தை மேய நினைப்போருக்கு இ5 போனும், விடியோ கால் வசதி கண்டிப்பாக வேண்டும் என நினைப்போருக்கு சி5 போனும் சிறந்தது.


உங்கள் ஈமெயில்களின் வருகையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இளைஞர்களையும் அலுவலகம் செல்லும் நபர்களையும் குறி வைத்து இந்த போன்கள் வந்துள்ளன. ஒரே நேரத்தில் பத்து ஈமெயில் அக்கௌன்ட்கள் வரை இந்த போனில் நாம் பார்க்கலாம். இதில் சாட்டிங் வசதியும் உள்ளது. போன் வாங்கும் பொழுதே சாட்டிங் சாப்ட்வேரும் சேர்ந்தே வருகிறது.
மேலும் இந்த போனின் சிறப்பம்சங்கள்
▪ 2.4 inch QVGA LCD display
▪ 320 x 240 pixel resolution
▪ Full QWERTY keyboard
▪ 3G Connectivity
▪ Wi-Fi
▪ 5 megapixel camera with LED flash
▪ 250 MB internal memory
▪ 32 GB expandable memory
▪ 2 GB MicroSD card included
▪ 3.5mm headphone jack
▪ Bluetooth
▪ A-GPS
▪ OVI Maps
▪ 1 click access to SMS/MMS and email
▪ OVI Chat
▪ OVI Share
▪ 18 hours 30 mins talktime
▪ 29 days stand-by time
▪ 1200 mAh battery





 The smart way  to stay in contact



Connect seamlessly to the people in your professional and personal lives through instant messaging, email and your favourite online social networks.







                      

Applications

  • View and edit Microsoft Word, Excel and PowerPoint documents using the
    Quickoffice application. 
  • Sync your documents, photos, calendar and contacts – your Nokia E5 works
    seamlessly with your compatible computer. 
  • Listen to your favourite tracks, create playlists and import music from
    your personal collection with Nokia Ovi Player.