Monday, January 10, 2011

கணணி


   மார்ச் முதல் பேஸ்புக் சேவை நிறுத்தப்படுமா?

பேஸ்புக் பாவனையாளரா நீங்கள்? தினசரி அதில் உலாவருபவரா?
அவ்வாறாயின் இச்செய்தியை கேள்வியுற்றிருந்தால் ஆடித்தான் போய்
இருப்பீர்கள்.ஆம் கடந்த சில தினங்களாக பேஸ்புக்கானது தனது சேவையை
 நிறுத்திக் கொள்ளப்போகின்றது என்ற செய்தி வேகமாக பரவிவந்தது.
இணையத்தளமொன்று கடந்த சனிக்கிழமை வெளியிட்ட இச்செய்தியில் 
பேஸ்புக்கானது எதிர்வரும் மார்ச் மாதம் தனது சேவையை 
நிறுதிக்கொள்ளவுள்ளதாகவும், அதிகப்படியான உளைச்சலே இதற்கான 
காரணமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இச்செய்தியானது பிரபல டுவிட்டர் 
மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களில் வேகமாக பரவியது. பலரை 
பெரும் சோகத்துக்குள்ளாக்கியது என்று கூட சொல்லலாம்.எனினும் 
இது வெறும் வதந்தி எனவும் பேஸ்புக் தொடர்ந்து செயற்படும் 
எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளதுபேஸ்புக் இணையதள நண்பர்கள் 
சமூக அக்கறை உள்ளவர்களா?லண்டன் : "பேஸ்புக் போன்ற சமூக 
இணையதளங்களில் உலவுவோர் உண்மையில் சமூக அக்கறை 
இல்லாதவர்கள்; இதுபோன்ற "ஆன்லைன்' நண்பர்களை நம்பாமல் 
இருப்பதே நல்லது' என, மனநல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில், 
பிரிட்டனை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தனது 1,048 "பேஸ்புக்' 
நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து 
தெரிவித்துள்ளார். ஆனால், எவருமே அவருக்கு நன்றி அல்லது வாழ்த்துகள் 
தெரிவிக்கவில்லை.இதனால், மனமுடைந்த அவர் தூக்க மாத்திரைகள் 
சாப்பிட்டுள்ளார்.
 அதுபற்றியும் தனது "பேஸ்புக்' பக்கத்தில் எழுதியுள்ளார். அவரது நண்பர்கள் 
பலர் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், ஒருசிலர்
 மட்டும் கடமைக்காக அவரது முகவரியைக் கேட்டுள்ளனர். இருந்தாலும் 
யாரும் குறிப்பிட்ட நபரை நேரில் சென்று பார்க்கவில்லை.மறுநாள் 
அப்பெண்ணை பார்க்க வந்த அவரது தாய், தனது மகளின் தற்கொலையைக் 
கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த தற்கொலை சம்பவம் "பேஸ்புக்' 
இணைய நண்பர்கள் பற்றி வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் மனநல நிபுணர்கள் சிலர் இதுகுறித்து கூறியதாவது: 
உண்மையான ரத்தமும், சதையுமான நண்பர்களை யாரும் நம்புவதில்லை. 
மாறாக, இதுபோன்ற சமூக வலைதளங்களில் உள்ள நண்பர்களையே 
மிகவும் நம்புகின்றனர். சமூக வலை தளங்களில் முகம் தெரியாத, சமூக
அக்கறை இல்லாத பலர் நண்பர்களாகவலம் வருகின்றனர்.இன்னும் சிலர்
குளிப்பது முதல் தூங்குவது வரை பல விஷயங்களை தங்கள் 
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்; நண்பர்களும் தங்களைப் போல் 
உண்மையாக இருப்பதாக நினைத்து ஏமாறுகின்றனர்.தற்போதைய உலகில் 
உண்மையான நட்பு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இந்த 
நிலையில், "பேஸ்புக்' போன்ற சமூக வலை தளங்களில் முன்பின் பார்க்காத, 
முகம் தெரியாத நண்பர்கள் அவசியம் தானா என்பதை நாம் யோசிக்க 
வேண்டும். சமூக வலை தளங்களில் உலவும் பலருக்கு "நண்பர்கள்' என்பதன் 
உண்மை அர்த்தம் தெரிவதில்லை. நேரம் கடத்தவும், பொழுதுபோக்கவும் பயன்படும் 
சமூக வலை தளங்களில் உண்மையை எதிர்பார்ப்பது அவசியமற்ற ஒன்று.
"தனக்கு எது நடந்தாலும் "பேஸ்புக்' நண்பர்கள் காப்பாற்றுவர்' என நினைப்பது 
அடிமுட்டாள்தனம். உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒருவர் எதையாவது 
கூறும்போது, நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு 
பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்து விடலாம். இவ்வாறு மனநல 

நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்."பேஸ்புக்' செய்தித் தொடர்பாளர் மரியா ஹீத்
 இதுகுறித்து கூறுகையில்,"தற்கொலைகளை தடுக்க எங்களால் முடிந்த 
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும், பிரச்னை 
உள்ளவர்கள் "பேஸ்புக்' இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள உதவி மையத்தை 
தொடர்புகொண்டால், உரிய தீர்வு காண நாங்கள் முயற்சிப்போம். இதற்காக, 
முழுநேர பணியாளர்களையும் நியமித்துள்ளோம். கடந்த ஆண்டில், 
இதுபோன்று 129 பேரின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளோம்,'' என்றார்





கணனியை சட்டவுன் செய்யும் 

போதே Ccleaner மூலம் கிளீன்


இருக்கும் அனைத்து கணனி மற்றும் 

உலாவியை சுத்தப்படுத்தும் 

மென்பொருட்களிலேயே CCleaner 

சிறந்ததாகும். 

கணனியில் ஒவ்வொருமுறையும் 

CClaner ஐ திறந்து அதன் பின்னர் 

சுத்தப்படுத்தும் பணியை செய்வதற்கு 

நேரம் போததாக இருக்கலாம். 

உதாராணமாக ஒன்றுக்கு மேற்பட்ட 

கணனிகள் இருக்கும் இன்ரநெற் 

செண்டர் போன்றவற்றில் இதை 

செய்வது சாத்தியம் இல்லை.

அதற்கு பதிலாக கணனியை 

நிறுத்தும் போதே சட்டவுண் செய்யும் 

போதே தானாகா CCleaner ரன் செய்து 

கிளீனிங் பணியை 

செய்யக்கூடியதாக இருந்தால் மிக 

இலகுவல்லவா? அதை எப்படி 

செய்வது?

1. CCleaner இன் மற்றுமொரு டூல்
 
AutoCleaner

  ஐ நிறுவிக் 

கொள்ளுங்கள். இதன் மூலம் 

உலாவியை நிறுத்தும் போதே 

தன்னியக்கச் செயற்பாட்டின் 

மூலமாக உலாவில் சேமிக்கப்பட்ட 

தகவல்கள் அழிக்கப்பட்டுவிடும்.

2. Desktop இல் வலது கிளிக் செய்து 

NEW - Sortcut செல்லுங்கள் அதன் 

பின்னர்

"C:\Program Files\CCleaner\CCleaner.exe" 

/AUTO /SHUTDOWN


என்பதை Target என்ற இடத்தில் 

பேஸ்ட் செய்து OK செய்யுங்கள்.
 

3. இனிமேல் கணனியை சட்டவுன் 

செய்யும் போது இந்த சாட்கட் ஐ 

பயன்படுத்துங்கள். அதன் பின்னர் 

கணனி சட்டவுன் ஆகும் முன் 

CCleaner ரன் செய்யப்பட்டு கணனி 

சுத்தம் செய்யப்படும்.

இது தொடர்பாக உங்கள் 

கருத்துக்களை தெரிவிக்கலாம்.


Map IP Address


                    பிளாகர் ஒரு  பார்வை


                                           BLOGGER IN DRAFT 

                 


இதற்கு நீங்கள் draft.blogger.com என்னும் முகவரிக்கு  செல்ல வேண்டும்.அந்த பக்கத்தை நீங்கள் ப்ளாகரின் இயல்பு நிலை டஷ்போர்டாகவும்(default dashboard) மாற்றிக்கொள்ளலாம்.