கணணி




   பேஸ்புக் தகவல் தரவிறக்கம்






நண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இன்று பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது. பலர் தங்களுடைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப்போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகியவற்றை இதில் போட்டு வைக்கின்றனர். இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து கொள்ள அனுமதியும் அளிக்கின்றனர். 

இந்த தகவல்களை எப்படி டவுண்லோட் செய்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய்து கொள்ளுங்கள். உள்ளே நுழைந்த பின்னர், Account என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Account Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Learn More என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைப்பதில் கீழிருந்து இரண்டாவதாக உள்ள Download Your Information என்பதில் கிளிக்கிடவும். நீங்கள் எது குறித்து கிளிக் செய்கிறீர்கள் என்பது குறித்து சிறிய விளக்கம் ஒன்று தரப்படும். இங்கு Download என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இப்போது உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் திரட்டப்பட சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் நீங்கள் தந்துள்ள இமெயில் முகவரிக்கு, நீங்கள் விரும்பிய தகவல்கள் அடங்கிய சுருக்கப்பட்ட ஸிப் பைல், டவுண்லோட் செய்திடத் தயாராய் இருப்பதாக செய்தி கிடைக்கும். இங்கு கிளிக் செய்து, உங்கள் பாஸ்வேர்டை அடையாளம் உறுதி படுத்த பெறப்பட்ட பின், ஸிப் பைல் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் ஆகும். படங்கள், போட்டோக்கள், பைல்கள் என அனைத்தும் சுருக்கப்பட்ட பைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும்.








ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை          
              நிரந்தரமாக அழிப்பது எப்படி?


உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.



ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

1.Eraser

" style="border-bottom: 0px; border-left: 0px; border-right: 0px; border-top: 0px; margin: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" />

தரவிறக்கம் செய்ய.

2.Kill Disk



தரவிறக்கம் செய்ய.


  புது வசதிகளுடன் மாற்றங்களுடன்          
                                        பேஸ்புக்

சமூக வலைப்பின்னல் உலகில் தினம் தினம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்திவரும் பேஸ்புக் தற்போது புரொபைல் பேஜ் வடிவத்தினை மாற்றியமைத்துள்ளதுடன், வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நமது புதிய பேஸ்புக் புரோஃபைல் பேஜ் வடிவமைப்பானது படிப்படியாகவே மாற்றப்பட்டு வருகின்றது. எனினும் நீங்கள் விரும்பினால் இந்த வசதியினை உடனடியாக பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இதனை உடனடியாக பரிசோதிக்க விரும்பின்,
A ) இம் முகவரியில் சென்று உங்கள் கணக்கினுள் நுழையவும். B) பின்னர் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டுள்ள ' You have the new profile' என்று குறிப்பிடப்பட்டுள்ள பச்சை நிற பட்டனை அழுத்தவும்.
c) இப்போது உங்கள் புரோஃபைல் மாற்றமடைந்திருக்கும்.
தற்போது புதிய வடிவில் தரப்பட்டுள்ள வசதிகள் மற்றும் மாற்றங்கள் பற்றி பார்வையிடுவோம்.
1) முதலாவதாக உங்களைப் பற்றியதொரு சிறிய அறிமுகம் தரப்படும் நீங்கள் எங்கு கல்வி கற்றீர்கள், பிறந்த திகதி, எங்கு வளர்ந்தீர்கள்? தற்போது என்ன செய்கிறீர்கள் என்பது தொடர்பிலானது இந்த அறிமுகம்.
அதற்குக் கீழ் அண்மையில் டெக் செய்யப்பட்ட புகைப்படங்கள் எனினும் இவ்விடயத்தில் உங்கள் 'பிரைவசி' தொடர்பான எல்லைகள் மீறப்படவில்லை காரணம் நீங்கள் அனுமதியளித்தவர்கள் மட்டுமே இப்புகைப்படங்களைப் பார்வையிட முடியும்.
2) மிக இலகுவாக மற்றைய வோல், இன்போ, போடோஸ் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வசதி.
3) தற்போது உங்கள் தொழில் மற்றும் கல்வி என்பன பற்றி அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும். மேலும் உங்களுடன் இருந்த நண்பர்களை உள்ளடக்க முடிவதுடன் - உங்கள் அனுபவங்கள், திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட முடியும்.
4) உங்களுக்கு பிடித்தமான இசை, வீடியோ, விளையாட்டு, விருப்பங்கள் ஆகியவற்றை 'விஷுவல்' வடிவில் காணமுடியும்.
5) இவற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதுதான் நண்பர்களை அவர்களூடான உங்களின் தொடர்புக்கு ஏற்ப பிரித்துக் கொள்வதாகும். கீழ் காட்டியவாறு அவர்களைப் பிரித்து பட்டியலிட்டுக் கொள்ள முடியும். உறவினர்கள், சிறந்த நண்பர்கள், சக ஊழியர்கள், பாடசாலை நண்பர்கள் போன்றோர் அடிப்படையில் இதனைப் பிரித்துக்கொள்ள முடியும்

   Youtube- லிருந்து ஒலி (mp3) மட்டும்
           பிரித்து எடுக்க!
 
Youtube தான் உலகின் மிக பெரிய வீடியோ இணையதளம்.  இதில் இல்லாத பாடல்களே இல்லை எனலாம்.  முந்தைய பதிவில், Youtube-லிருந்து எப்படி mp4 ஆக தரவிறக்கம் செய்வது பற்றிப் பார்த்தோம்.  இந்த பதிவில், எப்படி mp3-ஆக தரவிறக்கம் செய்வது பற்றிப் பார்ப்போம்.  அதாவது, வீடியோ காட்சி இல்லாமல், பாடல் ஒலியை மட்டும் பிரித்தெடுத்துத் தரவிறக்கம் செய்திடலாம்.  இதனால், நேரமும், bandwidth-ம் மிச்சம்.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்குச் சென்று, அதில் எந்த வீடியோவின் ஒலியைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமோ, அதன் முகவரியைத் தரவும்.
உதாரணத்திற்கு,  http://in.youtube.com/watch?v=L4HSg8nM-sU, இந்த பாடலின் ஒலியைத் தரவிறக்கம் செய்திட,  http://www.youtube.com/watch?v=L4HSg8nM-sU என உள்ளிடவும்.  அதாவது, முதலில் இருக்கும் "http://in"-ஐ "http://www" என மாற்றி உள்ளிட்டு, ”Go"ஐ சொடுக்கினால், சிறிது நேரத்தில், download link கிடைத்து விடும்.