மின் வணிகம்

வணக்கம்.............................!
இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்........................?
உங்கள் ஓய்வு நேரத்தில் அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருந்த படியே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இலகுவான வழிமுறைகள் பற்றி உங்களுக்கு கற்றுத்தருவதுக்காக  இந்த  தளம் உருவாக்கப்பட்டுள்ளது . எமது பதிவுகளை தொடக்கத்தில் இருந்து முழுவதும் படிப்பதனூடாக நீங்களும் இணையத்தில் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
    

            இணையத்தில் பணமீட்ட முதல் படி..

இன்று உலகில் நாளுக்கு நாள் பெருகி வரும் சனத்தொகை போல இணையத்தள பாவனையாளர்களும் நாளுக்கு நாள் பெருகிய படியே இருக்கின்றனர். இணையத்தளம் எனும் மாபெரும் சமூகத்தில் விற்பனை, கொள்முதல்,லாபமீட்டல் போன்ற சகல ந‌டவடிக்கைகளும் தங்கு தடையின்றி தொடர்கின்றன. இச்சந்தையில் பணமீட்டுவதென்பது நமக்கும் சாத்தியமான விடயமே.
அதற்கான நடைமுறைகள் மிகவும் சாத்தியமானதும் எளிதானதும் ஆகும். அவற்றை கற்றுதருவதே இந்த தளத்தின் நோக்கம் ஆகும்.

இணையத்தில் பணமீட்ட நமக்கு முதலாவதாக தேவையானது நாம் சம்பாதிக்கும் பணத்தை பெற்றுக்கொள்ள நமது பெயரில் உள்ள ஒன்லைன் அக்கவுன்ட்(online account ) ஆகும்.இந்தஒன்லைன்  அக்கவுன்டு (online account )  களிற்கு பணத்தை பெற்றுக்கொள்வதன் மூலமே நாம் அந்தப் பணத்தை செக் ஆகவோ அல்லது பணமாகவோ எமது வங்கிக்கணக்குக்கு பெற்றுக்கொள்ள முடியும். தற்பொழுது பல தளங்கள் இந்த ஒன்லைன் அக்கவுன்டுகளை இலவசமாக வழங்குகின்றன. 
உதாரணமாக‌

அலேர்ட் பே ("AlertPay")
பேய்பால்
மணிபுக்கர்ஸ் என்பவற்றை குறிப்பிடலாம்.

இதில் நாம் பரிந்துரைப்பது அலேர்ட்-பே ஆகும். இது இலகுவானதும் இலவசமானதும் ஆகும். எமது பணப்ப‌ரிமாற்றங்களின்போது உச்சகட்ட உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் இந்த தளம் வழங்குகின்றது.

அலெர்ட்-பே யில் அக்க‌வுண்ட் ஆரம்பிப்பது மிகபவும் இலகுவான செயல்முறை ஆகும். இதற்குத் தேவை நீங்கள் பாவிக்கும் ஒரு ஈ மெயில் முகவரி மாத்திரமே.

>> இங்கே கிளிக் செய்து வரும் வின்டோவில்
>> Sign up now என்பதை கிளிக் செய்யுங்கள்.
>> பின் Personal Pro என்பதை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து வரும் போர்மில் உங்களைப் பற்றிய சரியான தகவல்களை கொடுத்து  உங்களிற்கான‌  இலவச அலேர்டபே அக்கவுண்டை ரெஜிஸ்டர் செய்யுங்கள்
குறிப்பு: நீங்கள் பதிவு செய்யும் போது பெயர், விலாசம் போன்ற விடயங்களிற்கு முற்றிலும் ச‌ரியான விடயங்களை கொடுத்தல் வேண்டும். இல்லாவிட்டால் செக்காகவோ, பணமாகவோ மாற்றம் செய்யும் போது சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உங்கள் அலெர்ட்‍‍பே கணக்கு ஆரம்பிக்கப்பட்ட பின்பு உங்கள் ஈ மெயில் முகவரியே உங்கள் அலெர்ட் பே முகவரியாக இருக்கும். உதாரணத்துக்கு உங்கள் வங்கிக் கணக்குக்கு ஒரு க‌ணக்கிலக்கம் இருப்பது போல உங்கள் அலெர்ட்-பே கணக்குக்கு நீங்கள் பதிவு செய்த ஈ மெயில் முகவரியே பயன்படுத்தப்படும்.

அலெர்ட் பே அக்கவுண்டில் உள்ள பணத்தை நீங்கள் செக் ஆகவோ அல்லது வங்கிக்கணக்குக்கு பணமாகவோ அல்லது ஒன்லைனில் வேறு பொருட்கள் சேவைகளை வாங்குவதற்காகவோ பயன்படுத்தலாம்.







      உங்கள்    இணையத்திற்கு மக்கள் வரத்து
                             Make Money By Pay Per Post

வலைப்பதிவுகளானலும் சரி, இணையதளங்களானாலும் சரி - இணையப்பயனாளர்கள் விளம்பரங்களை பார்ப்பது கூட இல்லை. ஆனால் விளம்பரங்களையே வலைப்பதிவுகளை போல எழுதினால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு பதில் கிடைத்தாகி விட்டது!

முதலில் www.ReviewMe.com என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் வலைப்பதிவுகளை பதிவு செய்து கொள்ளவும். அடுத்தது, ஒரு குறிப்பிட்ட விளம்பரதாரர் பொருளுக்கோ அல்லது சேவையைப் பற்றியோ விமர்சனங்களை உங்கள் வலைப்பதிவுகளில் எழுதவும். நீங்கள் ஒவ்வொரு முறையும் எழுதும் போதும் உங்களுக்கு சுமார் 25 டாலர் வரை பணம் கிடைக்கும் (This is called Pay Per Post ).

வலைப்பதிவாளரான உங்களுக்கு இதேன்ன கஷ்டமா? உங்களுக்கு முழு சுதந்திரமும் விமர்சிப்பதில் உண்டு. பாசிட்டீவ் மற்றும் நெகட்டீவ் கருத்துகளையும் கூறலாம்.

மேலும் ஒரு செய்தி : நீங்கள் எழுதும் மொழி எதுவாகவும் இருக்கலாம்! உங்கள் வலைப்பதிவுகளை பதிவு செய்யாமல் தள்ளுபடியானல் கவலை வேண்டாம், உங்கள் வலைப்பதிவை கொஞ்சம் பேமஸ் ஆக்கிவிட்டு, நல்ல மக்கள் வரத்தோடு மீண்டும் சென்று சமர்பியுங்கள்! இன்றே செல்வீர்
ReviewMe க்கு!

            வலைப்பதிவாளர் அறிவுச் சுரங்கம்
                 Improve Your Blogger Knowledge Base

வலைப்பதிவு யுத்திகள் நாளுக்கு நாள் மாறி வருகிறது. இன்று இருக்கும் ஒரு நுட்பம் நாளைக்கு பழையதாகி விடுகிறது. எனவே மாறி வரும் வலைப்பதிவு உலகில், உங்கள் வலைப்பதிவுகள் கால் பதிக்க வலை உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

டேலிஷியஸ்

‘ யாம் பெற்ற இன்பத்தை யாவரும் பெறுக’ என்பதை போல, இனைய உலகத்தில், தனக்கு பிடித்த, மிகச்சிறந்த பார்வைக்கு வைப்பது தான் இந்த தளத்தின் சேவையாகும். பதிவு செய்த தளங்களை ஒரு தலைப்பின் கீழ் கோர்ந்து வைக்கலாம். நீங்கள் சேர்த்த உங்கள் விருப்ப தளங்களுக்கு எத்தனை பேர் உங்களை போல கோர்த்து உள்ளனால் என்பதும் தெரியும். எனவே நீங்கள் விரும்பும் இணையதளத்தில் பெருமையையும் அறியலாம். மறுபக்கம், ஒவ்வொரு தலைப்பின் கிழும் பதிவு செய்யப்பட்டிருக்கும், உங்களுக்கு தெரியாத இனையதளங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள். இணைய உலகத்தின் சமிபத்திய மாற்றங்களை தெரிந்த கொள்வீர்.

Click here to see what you get out of del.icio.us

2. டெக்னோராட்டி:


இது விருப்ப இணையதளங்களை கோர்த்து கொள்ளவும், பார்வையிடம் மாத்திரம் இல்லாமல், மிகப் பெறும் வலைப்பதிவு திரட்டியாகவும் உள்ளது. இங்கு வலைப்பதிவுகளையும், அவற்றின் வலைப்பதிவாளர்களின் விருப்ப தளங்களையும் பார்வையிட முடிகிறகிறது. இங்கும் ஒவ்வொரு தலைப்பின் கீழும் வலைப்புக்கள் பிரித்து தரப்படுகிறது.

Click here to know what you get out of Technorati account

3. பிலாக் லைன்ஸ்:

சரி உங்களுக்கு பிடித்தமான தளங்கள் கைநிறைய கிடைத்திருக்கிறது. மேலும் இத்தளங்கள் ஒவ்வொரு முறையும் இந்த தளங்கள் புதுப்பிக்கப்படும் முன்பும் அவற்றை மீண்டும் மீண்டும் சென்று பார்க்க முடிவதில்லை. இந்த பிரச்சனைகளை தீர்க்கவே பிலாக் லைன்ஸ் உள்ளது. ஒரு முறை உங்களுடைய விருப்ப தளங்களை இங்க பதியவும், மற்றவைகளை மறந்துவிடுங்கள். பிலாக் லைன்ஸ் உங்கள் விருப்ப தளங்கள் புது பிக்கப்படும் போது அவற்றை கண்காணித்து பது செய்திகளை வாசிக்க தருகிறது.

மற்ற சில தளங்களும் இதே சேவையை தருகின்றன, இதிலென்ன விசேஷம் எனக் கேட்கலாம் இருக்கிறது. பயன்படுத்துவோர் எளிதாக தங்களது விருப்ப தளங்களை ஒழுங்கு படுத்தும் பளேலிங்டு வசதி உள்ளது. அவர்களே வெவ்வேறு தலைப்பின் கீழ் பல இணையத்தங்களையும் எற்கனவே பிரித்து வைப்படுத்தி உள்ளனர். அவற்றில் இருந்தும் உங்களுக்கு பிடித்த வற்றை தேர்ந்தேடுத்து வாசிக்கலாம். எனவே இன்றே இந்த சேவைகளை பயன்படுத்துவீர்! உங்கள் ‘அறிவுச்செல்வம்’ நாளுக்கு நாள் வளர்பதைக் காண்பீர்கள். வாழ்த்துக்கள்!

            உங்கள் இணையத்திற்கு மக்கள் வரத்து!
                              How to get traffic to blogs?
ஒரு சிறந்த, இணையப்பயனாளர்கள் எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய, வாசிதது ரசிக்கிற பிலாகை உண்டாக்கி விட்டீர்கள். நீங்கள் எழுதிய அந்த பிலாகில் A to Z அனைத்து தகவல்களும் அடங்கி உள்ளது. இப்பொழுது நீங்கள் எழுதிய பிலாகிற்கு மற்றவர்கள் வந்து வாசிக்க வேண்டும். இதையே Traffic என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.
உலகின் தலைசிறந்த இணையப்பக்கமாக இருந்தாலும் அதற்கு மக்கள் வரத்து இல்லையென்றால் அந்த இணையதளம் வீணே!
ஏனெனில், மக்கள் வரத்து இருந்தால் மட்டுமே அவர்கள் உங்கள் இணையதளத்தை (பிலாகும், இணையதளம் போன்றது தான்!) பயன்படுத்த இயலும். பயன்பாடு இருந்தால் தான் உங்களுக்கு பணம் வரும்.
இணையதளத்திற்கு டிராப்பிக்கை, இவ்வாறு ஒப்பிடலாம். நான் ஒரு மளிகைக்கடை ஒன்றை புதிதாக தொடங்குகிறேன். சுற்றுவட்டாரங்களில் உள்ள மற்ற மளிகைக் கடைப்போன்று இல்லாமல், பொருட்கள் தரமானதாகவும், சரியான அளவிலும், வாடிக்கையாளரை நீண்ட நேரம் நின்று பொருட்களை வாங்குவதை தவிர்த்து நியாயமான விலையில் இருக்கும் படி அமைத்து விட்டேன். இப்படி நான் ஏற்பாடு செய்திருந்தும், வாடிக்கையாளர் என் கடைக்கு வரவில்லை.
ன்?
இந்தக் கேள்விக்கான பதில் மிகமிக எளிது. எனது கடையைப் பற்றி நான் விளம்பரம் செய்யவில்லை என்பது தான்! விளம்பரம் என்பதை மிகவும் தெளிவாக கூற வேண்டுமானால், மற்றவர்களுக்கு உங்கள் பொருட்களை, கூறுவது தான். கடைக்கு விளம்பரம் கொடுத்து மக்களை கடைக்கு வரவழைத்து, அவர்களை கவரும் படி கடை வியாபாரம் அமைந்தால், பின்பு அவர்கள் வாடிக்கையாக கடைக்கு வரச்செய்து வாடிக்கையாளர்களாக பெறமுடியும். இதிலிருந்து ஒன்று புரியும். உங்கள் கடைக்கு மக்கள் வரத்து இருந்தால் மட்டுமே, பணம் கிடைக்கும். இந்த கருத்து இணையதளத்தை வைத்து வியாபாரம் செய்வதற்கும், அப்படியே பொருந்தும்! எனவே சில அப்ளியேட் ப்ரோகிராம்களில் சேர்ந்து, அப்ளியேட் URL ஐ உங்கள் பிலாகுகளில் சேர்த்தால் மட்டும் போதாது. உங்கள் இணைய தளத்திற்கோ, பிலாகிற்கு, மக்கள் வரத்தை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், பிலாகும், ஒரு இணையதளத்திற்கு சமம். மக்கள் வரத்தை (Traffic) ஏற்படுத்த இரண்டு வழிகள் உண்டு.
ஒன்று, சிறிது பணம் செலவழித்து பெறலாம். இரண்டாவது வழி முற்றிலும் இலவசமானது.
இலவசமாக ஏனோ கிடைப்பதால், இதைப் பயன்படுத்தினால் பயன் இன்றும் கிடைக்காது என்று நினைத்து விடாதீர்கள். பணம் செலவழித்து மக்கள் வரத்தை பெறுவதைப் பற்றி பின்பு கூறுகிறேன்.
இப்பொழுது இலவசமாக மக்கள் வரத்தை தரக்கூடிய சிறப்பு அம்சங்கள் உடைய வெப்தளங்களைப் பற்றி பார்ப்போம்.
ஒரு Idea!
உங்களுக்கு Jack pot! (பண மழை) அடிக்க வேண்டுமா? நீங்கள் உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல்-ஐ(affiliate URL) இந்த தளங்களில் தரலாம். உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல்.யிற்கு மக்கள் வரத்து கிடைக்கும். அவர்கள் அந்த இணையத்தளத்தில் வாங்கினால், பணம் உங்கள் பாக்கெட்டிற்கு வரும். நீங்கள் வேறெதும் செய்ய வேண்டாம். உங்கள் அப்லியேட் யு.ஆர்.ல். ஐ இங்கு தரவும், பணம் தானாக வரும்.

உங்கள் இணையதள யு.ஆர்.ல்-ஐ தந்த சில நிமிடங்களில் உங்கள் இணையதளத்திற்கு அலைக்கடல்லென மக்கள் வரத்து இருக்கும். Instant buzz என்று பெயருக்கு ஏற்ப, உடனடியாக, உங்கள் வெப்தளத்தைப் பற்றி செய்தியை புரளி போன்று பரவ செய்து விடும். இலவச மக்கள் வரத்து சேவையைத் தரும் வெப்தளங்களில் முதன்மையானது. இவர்கள் தளத்தில் சென்று toll bar ஐ download செய்து கொள்ளவும். பின்பு எப்போதும் போல பிரவுஸ் செய்யவும். உங்கள் தளத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க பாயிண்ட்ஸ் தேவை. நீங்கள் பார்வையிடும் எந்த தளத்திற்கும் பாயிண்ட்ஸ் கிடைக்கும். இந்த சேவை முற்றிலும் இலவசம்.

தேனீக்கள் கூட்டம் போல மக்கள் வரத்து கிடைக்கும். இன்டர்நெட்டில் பிரபல மக்கள்வரத்தை தரும் சேவையைத் தருகிறது. பத்து URL வரை சேர்க்கலாம். மற்றவர்கள் வெப்சைட்டை பார்வையிட்டால் உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

ஒரு account ஐ தொடங்கி, உங்கள் வெப்தளத்தை தரவும். உங்கள் வெப்தளத்திற்க வேறு வெப் தளங்களில் இருந்து இணைப்புகள் கிடைக்கும். மற்ற இணைய தளங்களில் இருந்து உங்கள் இணையதளத்திற்கு இணைப்பு (link) கிடைத்தால், தேடு பொறிகளில் உங்கள் வெப்சைட்டின் மதிப்பு கூடி, அவைகளில் இருந்து மக்கள் வரத்து கிடைக்கும்.

நுண்கிருமிகளான வைரஸ், பாக்டீரியாக்கள் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கில் பெருகுகின்றன. அதே போல் உங்கள் வெப்சைட்டிற்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான மக்களை கொண்டு வர செய்ய முடியும். இது முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு இலவச சேவையாகும்.